மழை வெள்ளத்தினால் அடித்து செல்லப்பட்ட பேருந்தில் காணப்பட்ட 54 பயணிகள் பொலநறுவை பிரதேசத்தில் மீட்கப்பட்டுள்ளனர்.
பயணிகளுடன் இந்த பேருந்து மாதுருஓயவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பேருந்து வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில் பொலநறுவை, கல்லேல்ல பிரதேசத்தில் வைத்து குறித்த பேருந்தில் இருந்தவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
பேருந்திற்குள் சிக்கியிருந்தவர்களை காப்பாற்றுவதற்காக பொலிஸார், இராணுவம், சிவில் பாதுகாப்பு பிரிவினர் உட்பட குழுவினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.