மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி

spt01
spt01

மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 8 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 160 ஓட்டங்களை பெற்று கொண்டது.

துடுப்பாட்டத்தில் தென்னாபிரிக்கா அணி சார்பாக ரஸ்ஸி வென் டர் டசன் ஆட்டமிழக்காது 56 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 15 ஓவர்கள் நிறைவில் 2 விக்கட்டுக்களை இழந்திருந்தபோதிலும் வெற்றியிலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் சார்பில் எவின் லிவிஸ் 71 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.