ஒலிம்பிக் வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை!

2017 06 09 tokyo2020 thumbnail
2017 06 09 tokyo2020 thumbnail

கொவிட்-19 தொற்றின் மிகவும் ஆபத்தான டெல்டா மாறுபாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை உட்பட ஆறு நாடுகளைச் சேர்ந்த ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள், ஜப்பானுக்கு புறப்படுவதற்கு முன்னர் ஏழு நாட்கள் தினசரி வைரஸ் பரிசோதனையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது அனைத்து வெளிநாட்டு விளையாட்டு வீரர்களும் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு புறப்படுவதற்கு நான்கு நாள் காலகட்டத்தில் இரண்டு முறை கொரோனா வைரஸ் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் இந்தியா, மாலைத்தீவு, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு ஜூலை 1 ஆம் திகதி முதல் புதிய விதிகள் அமுல்படுத்தப்படும்.

அதற்கு அமைவாக ஜப்பானுக்கு புறப்படுவதற்கு முன்னர் குறித்த நாடுகளைச் சேர்ந்தோர் ஏழு நாட்கள் தினசரி வைரஸ் பரிசோதனையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜப்பானிய ஒலிம்பிக் அமைச்சர் தமயோ மருகாவா வெள்ளிக்கிழமை, உகாண்டா ஒலிம்பிக் அணியின் உறுப்பினர் ஒருவர் நாட்டுக்கு வந்தவுடன் கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்தவர் டெல்டா மாறுபாட்டைக் கொண்டிருப்பதாகக் கூறியமையும் குறிப்பிடத்தக்கது.