இங்கிலாந்து அணிக்கு 186 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

1624972965 3099021 hirunews
1624972965 3099021 hirunews

இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 185 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

இதன்படி, முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 42.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 185 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பில் குசல் ஜனித் பெரேரா 73 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

அதன்படி, இங்கிலாந்து அணி 186 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட உள்ளது.