ஆசிய கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டிக்கு இலங்கை அணி தகுதி!

1626264065 5730142 hirunews
1626264065 5730142 hirunews

ஆசிய கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டிகளுக்கு இலங்கை தேசிய கரப்பந்தாட்ட அணி தகுதி பெற்றுள்ளது.

கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில், இன்று இடம்பெற்ற தகுதிகாண் போட்டியில் 3 – 0 என்ற அடிப்படையில் உஸ்பெகிஸ்தானை தோற்கடித்ததன் ஊடாக ஆசிய கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டிகளுக்கு இலங்கை அணி தகுதி பெற்றுள்ளது.

இப்போட்டிகளில் 25 – 23, 25 – 13 மற்றும் 25 -22 என்ற செட் கணக்கில் உஸ்பெகிஸ்தான் அணியை இலங்கை கரப்பந்தாட்ட அணி தோற்கடித்தது.

இலங்கை அணி இதற்கு முன்னதாக, ஆசிய சம்பியன்ஷிப் போட்டிகளில் இரண்டு தடவைகள் உஸ்பெகிஸ்தான் அணியுடன் மோதியுள்ளது.

2011 மற்றும் 2013 ஆம் ஆண்டு இடம்பெற்ற இப்போட்டிகளில் மூன்று சுற்றுகளில் 3 -0 என்ற கணக்கில் இலங்கை அணி வெற்றிபெற்றது. 1975 ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஆசிய சம்பியன்ஷிப் கரப்பந்தாட்ட போட்டிகளில் இதுவரையான காலப்பகுதியில் இலங்கை அணிக்கு அதிபட்சமாக 8 ஆவது இடத்தையே பிடித்திருந்தது.

2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பியன்ஷிப் போட்டியிலேயே இலங்கை அணிக்கு இந்த இடம் கிடைத்தது. 2019 ஆம் ஆண்டு ஆசிய சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை அணி 14 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டது.