பிற்போடப்பட்ட சுப்பர் லீக் கால்பந்தாட்டத் தொடர் மீண்டும் ஆரம்பம்

Screenshot 20210410 015522 Chrome
Screenshot 20210410 015522 Chrome

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிற்போடப்பட்டிருந்த சுப்பர் லீக் கால்பந்தாட்டத் தொடர் எதிர்வரும் ஆகஸ்ட் மாத இறுதியில் மீண்டும் ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஏப்ரல் 19 ஆம் திகதி ஆரம்பமான 10 அணிகள் பங்கேற்கும் தொழில்சார் சுப்பர் லீக் கால்பந்தாட்டத் தொடரானது மே மாதம் 2 ஆம் திகதி வரை நடத்தப்பட்டது. இதன்போது கொவிட் 19 அச்சுறுத்தல் மீண்டும் தலைத்தூக்கவே, போட்டித் தொடர் ஜூலை 2 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டிருந்தது. எனினும், நாட்டில் தொடர்ந்தும் கொவிட் 19 அச்சுறுத்தல் காணப்பட்டு வந்ததால், இப்போட்டித் தொடரை ஆரம்பிப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டிருந்தது.

எனினும், தற்போது முன்னரை விடவும் சுகாதார வழிமுறைகளை கடுமையாக பின்பற்றி போட்டிகளை நடத்துவதற்கான நடவடிக்கைகளை இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் எடுத்து வருகிறது.

இதுவரை நடைபெற்று முடிந்த 15 போட்டிகள் நிறைவில், வி‍ளையாடி 3 போட்டிகளிலும் வெற்றியீட்டியுள்ள சீ ஹோக்ஸ் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ரெட் ஸ்டார் அணி 7 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் கொலம்போ எப்.சி. அணி 6 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. புளூ ஸ்டார், அப் கண்ட்றி லயன்ஸ், டிபெண்டர்ஸ், ரட்ணம், றினோன்,புளூ ஈகள்ஸ் , நியூ யங்ஸ் ஆகிய அணிகள் முறையே அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.