மன அழுத்தம் காரணம் இறுதிப்போட்டியிலிருந்து விலகினார் அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனை!

520273 1
520273 1

ரியோ ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டிக் போட்டியில் 4 தங்கப் பதக்கங்களை வென்ற அமெரிக்காவின் சிமோன் பில்ஸ், டோக்கியோ ஒலிம்பிக் இறுதிப்போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

ரியோ டி ஜெனிரோவில் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில் அமெரிக்காவின் சிமோன் பில்ஸ் 4 பிரிவுகளில் தங்கப் பதக்கம் வென்றார்.

அவ்வாறே, அணி பிரிவிலும் அமெரிக்காவுக்காக தங்கப்பதக்கம் வென்று கொடுத்தார்.

ஓல் ரவுண்டர் பிரிவில் 5 முறையும், ப்ளோர் பிரிவில் 5 முறையும், பெலன்ஸ் பீம் பிரிவில் 3 முறையும், வொலட் பிரிவில் 2 முறையும் உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள சிமோன் பைல்ஸ், உலகின் தலைசிறந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனையாக கருதப்படுகிறார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், நேற்று நடைபெற்ற அணி பிரிவு இறுதிப்போட்டியில் இருந்து திடீரென விலகினார்.

இதனைத் தொடர்ந்து இன்று நடைபெறவிருந்த ஓல் ரவுண்டர் தனிநபர் பிரிவு இறுதிப்போட்டியில் இருந்தும் விலகுவதாக சிமோன் பில்ஸ் அறிவித்துள்ளார்.

தனது மன ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு இறுதிப்போட்டியில் இருந்து விலகியதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.

மன நலன் மற்றும் உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.