டோனியின் ‘ப்ளு டிக்’ விவகாரம் முடிவுக்கு வந்தது!

226565 1
226565 1

இந்திய கிரிக்கெட் அணியின் புகழ்பெற்ற வீரரான எம்.எஸ். டோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் அவரை பற்றி ஏதாவது ஒரு செய்தி இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சில தினங்களுக்கு முன்னர் அவரது புதிய சிகை அலங்காரத்துடனான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வந்தன.

இந்நிலையில், அவரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் உறுதிபடுத்தல் அடையாளம் (ப்ளு டிக்) நீக்கப்பட்டமை தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகின்றது.

நீண்ட நாட்களாக பதிவுகள் எதுவும் இடாத காரணத்தினால் டோனியின் ட்விட்டர் பக்கத்திற்கான உறுதிபடுத்தல் அடையாளம் (ப்ளு டிக்) நீக்கப்பட்டிருந்தது.

உறுதிபடுத்தல் அடையாளம் (ப்ளு டிக்) நீக்கப்பட்டமை தொடர்பில் பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அவரின் ட்விட்டர் பக்கத்திற்கு அந்த அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளது.

அவர் கடந்த ஜனவரி 8 ஆம் திகதிக்கு பின்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் எந்தவொரு பதிவையும் இட்டிருக்கவில்லை என்பதுடன், அவரின் ஓய்வு பற்றிய அறிவிப்பைக் கூட ட்விட்டர் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.