ஹொங்கொங் மக்களுக்கு அனுமதி வழங்கிய ஜோ பைடனின் தீர்மானத்துக்கு சீனா எதிர்ப்பு!

115268317 mediaitem115268498
115268317 mediaitem115268498

ஹொங்கொங்கில் வாழும் மக்களுக்கு தற்காலிகமாக அமெரிக்காவில் வாழ்வதற்கான அனுமதியினை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வழங்கியுள்ளார்.

ஹொங்கொங்கில் வாழும் மக்களின் சுதந்திரத்திற்கு பங்கம் ஏற்படும் வகையில் சீனா செயல்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியின் அனுமதிக்கு அமைய ஹொங்கொங் மக்களுக்கு 18 மாதங்களுக்கான நுழைவு அனுமதி வழங்கப்படும்.

பின்னர், தேவை ஏற்படின் நுழைவு அனுமதி நீடிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவினால் ஹொங்கொங் மக்களுக்கு வழங்கப்பட்ட இந்த விசேட அனுமதிக்கு சீனா தனது கடும் சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது.

இது முற்றுமுழுதாக சீனாவின் உள்விவகாரத்தில் தலையிடும் நடவடிக்கை என தெரிவித்துள்ளது. இப்படியான அநாவசிய செயல்பாடுகள் காரணமாக மீண்டும் ஹொங்கொங்கில் அமைதியின்மையை ஏற்படுத்தும் முயற்சி எனவும் தெரிவித்துள்ளது.