பரா ஒலிம்பிக்ஸ் போட்டி டோக்கியோவில் இன்று ஆரம்பம்!

6d6546f68dae573d68f7b6e99c2bfa19 XL
6d6546f68dae573d68f7b6e99c2bfa19 XL

மாற்றுத் திறனாளிகளுக்கான 16 ஆவது பராலிம்பிக்ஸ் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று ஆரம்பமாகிறது.

கடுமையான சுகாதார கட்டுப்பாடுகளுடன் இந்த பராலிம்பிக்ஸ் போட்டி இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

162 நாடுகளைச் சேர்ந்த 4,400 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இந்த போட்டியில் பங்கேற்று 539 பதக்கங்களுக்காக விளையாடவுள்ளனர்.

கொரோனா வைரஸ் காரணமாக இந்தமுறை இடம்பெறவுள்ள பராலிம்பிக்ஸ் போட்டிகளை பார்வையாளர்கள் போட்டி இடம்பெறும் மைதானங்களுக்குள் சென்று பார்வையிடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் பராலிம்பிக் போட்டியுடன் தொடர்புடைய 131 கொரோனா நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், ஒலிம்பிக்ஸ் கிராமத்தில் உள்ள சகலருக்கும் தினந்தோறும் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்று ஆரம்பமாகும் குறித்த பராலிம்பிக்ஸ் போட்டி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.