20க்கு 20 தொடரில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் சாம்பல் அணி சம்பியன்!

1629860046 5971994 hirunews
1629860046 5971994 hirunews

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அழைப்பு 20க்கு 20 தொடரில், ஸ்ரீலங்கா கிரிக்கெட் சாம்பல் அணி சம்பியனானது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் சிவப்பு அணியுடன் பல்லேகலை மைதானத்தில் நேற்றிரவு இடம்பெற்ற இறுதிப் போட்டியில், ஸ்ரீலங்கா கிரிக்கெட் சாம்பல் அணி 42 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தசுன் சானக்க தலைமையிலான ஸ்ரீலங்கா கிரிக்கெட் சாம்பல் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய அந்த அணி, 20 ஓவர்கள் நிறைவில், 4 விக்கெட்டுக்களை இழந்து 201 ஓட்டங்களைப் பெற்றது.

இதையடுத்து, 202 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய தினேஸ் சந்திமால் தலைமையிலான ஸ்ரீலங்கா கிரிக்கெட் சிவப்பு அணி, 19.4 ஓவர்களில் 159 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்தது.