நியூஸிலாந்தின் முன்னாள் வீரர் கிறிஸ் கெய்ன்ஸ் பாரிசவாதத்தால் பாதிப்பு!

vikatan 2021 08 f5dd7235 e736 49fb aa28 208b035fc914 E8bVnCoVIAE0262
vikatan 2021 08 f5dd7235 e736 49fb aa28 208b035fc914 E8bVnCoVIAE0262

நியூஸிலாந்து அணியின் முன்னாள் சகலதுறை வீரர் கிறிஸ் கெய்ன்ஸ் பாரிசவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அவரது இடது கால் பாரிசவாதத்தினால் தற்போது பாதிக்கப்பட்டுள்ளது. அவர் இன்னும் ஆபத்தான கட்டத்தைக் கடக்கவில்லை என்றும் இதிலிருந்து மீள நீண்ட காலமாகும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார் என்றும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

51 வயதான கிறிஸ் கெய்ன்ஸுக்கு உடல்நலக்குறைவு காரணமாக இதற்கு முன் ஏராளமான சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அஸ்திரேலியாவின் கேன்பரா நகரில் வசித்து வரும் கெய்ன்ஸ், இம்மாதத்தின் ஆரம்பத்தில் இதயத்தில் இரத்த நாளத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக திடீரென மயங்கி விழுந்தார்.

இதனையடுத்து, கான்பேராவிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் எவ்வித முன்னேற்றமும் இல்லாதிருந்ததால் சிட்னியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு கெய்ன்ஸுக்கு இதயத்தில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சத்திர சிகிச்சையையடுத்து, முள்ளந்தண்டில் ஏற்பட்ட பாதிப்பினால் திடீரென கெய்ன்ஸுக்கு பாரிசவாதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் சிறந்த சகலதுறை வீரர்களில் கெய்ன்ஸும் ஒருவர். 62 டெஸ்ட், 215 ஒருநாள் போட்டிகளில் அவர் நியூஸிலாந்துக்காக விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.