ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் மாற்றம்!

download 3
download 3

நடைபெறவுள்ள இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணியின் ஒசென் தோமஸ் மற்றும் எவின் லீவிஸ் ஆகியோர் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ஐ.பி.எல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து பென் ஸ்டொக் மற்றும் ஜொஸ் பட்லர் ஆகியோர் விலகியதை அடுத்து, குறித்த இருவரும் அணியில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

ஒசென் இதுவரை இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளதுடன், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 16 போட்டிகளில் விளையாடியுள்ள எவின் லீவிஸ் 430 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளார்.

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் எஞ்சிய போட்டிகள் ஐக்கிய அரபு ராச்சியத்தில் எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 15 ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.