அஸ்வினை பாராட்டிய கங்குலி

ganguly and ashwin
ganguly and ashwin

கடந்த பத்து ஆண்டுகளில் ஒரு நாள், டெஸ்ட் மற்றும் T20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களுக்கான ஐ.சி.சி வெளியிட்ட பட்டியலில் இந்திய வீரர் அஸ்வின் முதலிடம் பிடித்துள்ளார்.

இந்த பட்டியலில் அஸ்வின் 564 விக்கெட்டுக்கள் வீழ்த்தி முதல் இடத்திலும், இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் அண்டர்சன் 535 விக்கெட்டுக்கள் வீழ்த்தி இரண்டாவது இடத்திலும், 525 விக்கெட்டுக்கள் வீழ்த்தி பிராட் 3வது இடத்திலும், 472 விக்கெட்டுக்கள் வீழ்த்தி சவுதி 4வது இடத்திலும், 458 விக்கெட்டுக்கள் வீழ்த்தி டிரண்ட் போல்ட் 5வது இடத்திலும் இடம் பிடித்துள்ளனர்.

இது குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தனது ட்விட்டர் பக்கத்தில் ’சில நேரங்களில் கவனிக்கப்படாமல் போகிறது’ அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய அஸ்வினுக்கு வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.