அமெரிக்க ஓபனில் நான்காவது சுற்றுக்கு முன்னேறினார் அலெக்சாண்டர் ஸ்வெரெவ்!

E f9L1IWQAAdXZP
E f9L1IWQAAdXZP

அலெக்சாண்டர் ஸ்வெரெவ் சனிக்கிழமை நடந்த அமெரிக்க ஓபனின் நான்காவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். நியூயோர்க்கின் ஆர்தர் ஆஷே அரங்கில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் மூன்றாவது சுற்று ஆட்டத்தில் ஜேர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் அமெரிக்காவின் ஜாக் சாக்கை எதிர்கொண்டார்.

பரபரப்பாக இடம்பெற்ற இந்த ஆட்டத்தில் வலது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக நான்காவது செட்டின் போது ஜாக் சாக் போட்டியிலிருந்து விலகினார்.
இதனால் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் 3-6, 6-2, 6-3, 2-1 என்ற கணக்கில் அமெரிக்க ஓபன் போட்டியின் நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.

இதேவேளை ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த மற்றொரு 3 ஆவது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவை சேர்ந்த நோவக் ஜோகோவிச்சும், ஜப்பானைச் சேர்ந்த நிஷிகோரியும் மோதினார்கள்.

இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 6-7, 6-3, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார். பெண்கள் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சம்பியனும், தரவரிசையில் 3 ஆவது இடத்தில் இருப்பவருமான ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா, 73 ஆம் நிலை வீராங்கனையான 18 வயதான கனடாவின் லேலா பெர்னாண்டசை எதிர்கொண்டார்.

சுமார் 2 மணி 4 நிமிடம் நீடித்த இந்த ஆட்டத்தில் லேலா பெர்னாண்டஸ் 5-7, 7-6 (7-2), 6-4 என்ற செட் கணக்கில் நவோமி ஒசாகாவுக்கு அதிர்ச்சி அளித்து நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.