மனம் திறந்த ரஹானே!!!

download 2 5
download 2 5

இந்தியக் கிரிக்கெட் அணியின் சிறந்த துடுப்பாட்ட வீரரான அஜிங்கியா ரஹானே, ஐ.பி.எல். தொடரில் டெல்லி கெப்பிடல்ஸ் அணிக்கு மாறியது ஏன் என கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த 9 வருடங்களாக ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக விளையாடி வந்த முன்னணி துடுப்பாட்ட வீரரான அஜிங்கியா ரஹானே, எதிர்வரும் 2020ஆம் ஆண்டு டெல்லி கெப்பிடல்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார்.

இந்த நிலையில் இதுகுறித்து அவர் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறிய கருத்துக்கள் இவை, “எனது மனதில் அடுத்த அணிக்காக விளையாட வேண்டும் போன்ற எந்த சிந்தனையும் உதிக்கவில்லை. டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி, அவர்களுக்காக நான் விளையாட வேண்டும் என்று விரும்பியது.

கற்றுக் கொள்ளவும், ஒரு வீரராக வளரவும் கிடைத்த வாய்ப்பு என்று எண்ணினேன். நீண்ட வருடமாக விளையாட வாய்ப்பு கொடுத்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நன்றி சொல்லியாக வேண்டும். 2019 சீசன் மத்தியில் நடந்த சம்பவங்கள் எனக்கு ஏமாற்றத்தை கொடுத்தது.

கிரிக்கெட் எப்போதுமே டீம் ஸ்போர்ட் என்று நம்புகிறவன் நான். ஒரு வீரரின் தவறால் நீங்கள் தோல்வியடைய மாட்டீர்கள். அதேபோல், ஒரு வீரரின் சிறந்த திறமையால் வெற்றி பெற முடியாது. நீங்கள் என்னை குற்றம்சாட்ட நினைத்தால், அதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

அணித்தலைவர் பதவியில் இருந்து நீக்கிய பின்னர், என்னுடைய நெருக்கமான நண்பர்களிடம் உட்கார்ந்திருந்தேன். ஆனால், அணித்தலைவர் பதவி குறித்து எந்த விடயத்தையும் நான் பேசவில்லை. நான் எப்படி துடுப்பெடுத்தாட வேண்டும் என்பது குறித்து முடிவு செய்தேன்.

ஆக்ரோஷமான துடுப்பாட்டத்தை நேர்மறையாக சிந்தனையுடன் விளையாட வேண்டும் என்ற நோக்கத்துடன் களம் இறங்கினேன். அதனடிப்படையில் என்னுடைய திறமை வெளிப்பட்டது” என கூறினார்.