சானியா மிர்ஸா மீண்டும்

download 4 3
download 4 3

பெடரேஷன் கிண்ணத்திற்கான இந்திய மகளிர் டென்னிஸ் அணியில் 4 ஆண்டுகள் கழித்து இரட்டையர் பிரிவு நட்சத்திரமான சானியா மிர்ஸா மீண்டும் இணைந்துள்ளார்.

இந்திய மகளிர் டென்னிஸில் இரட்டையர் பிரிவில் 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற சானியா மிர்ஸா பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஷோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டார்.

சானியாக இறுதியாக 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற பெடரேஷன் கிண்ணத்தில் விளையாடியிருந்த போதும் கடந்த 2017 ஒக்டோபர் மாதம் முதல் குழந்தை பேறுக்கு பின்னர் டென்னிஸில் விளையாடுவதை தவிர்த்துவந்தார்.

இந்நிலையில் பெடரேஷன் கிண்ணத்திற்கான இந்திய மகளிர் டென்னிஸ் அணி அவருடன் ஒற்றையர் பிரிவு முதல்நிலை வீராங்கனை அங்கிதா ரெய்னா, ரியா பாட்டியா, ருட்டுஜா போஸ்லே, கர்மன் கௌர் தண்டி உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர்.