இருபதுக்கு இருபது இந்திய அணியின் தலைவராக ரோஹிட் சர்மா பொறுப்பேற்பார்!

Rohit Sharma hundred 1
Rohit Sharma hundred 1

இந்திய இருபது20 கிரிக்கெட் அணியின் அடுத்த தலைவர் பதவியை ரோஹிட் சர்மா பொறுப்பேற்பார் என தாம் கருதுவதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் வினோத் கம்ப்ளி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 20 க்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருடன் இந்திய 20 க்கு 20 அணித் தலைமை பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி நேற்று அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், வினோத் கம்ப்ளி குறித்த விடயத்தை தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்காக, ரோஹிட் சர்மா பல சந்தர்ப்பங்களில் தலைமைத்துவம் வழங்கியுள்ளதாக வினோத் கம்ப்ளி தெரிவித்துள்ளார்.

2017 ஆம் ஆண்டு முதல் விராட் கோலி தலைமையில், 45 இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்ற இந்திய அணி 27 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

14 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ள நிலையில், இரண்டு போட்டிகள் சமநிலையிலும், இரண்டு போட்டிகள் முடிவுகள் இன்றியும் நிறைவுபெற்றுள்ளன.

இதேநேரம் இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ரோயல் செலஞ்சர்ஸ் அணிக்கு 132 போட்டிகளுக்கு விராட் கோலி தலைமைத்துவம் வழங்கிய நிலையில், 60 போட்டிகளில் அந்த அணி வெற்றி பெற்றுள்ளது.

65 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ள நிலையில், 4 போட்டிகள் முடிவுகளின்றி நிறைவடைந்துள்ளன.