கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 128 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

kolkata knight riders 1602085072
kolkata knight riders 1602085072

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 41ஆவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிகள் மோதி வருகின்றன.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 127 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக ரிஷாப் பண்ட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் தலா 39 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சார்பில் சுனில் நரைன், லோகி பெர்கியூஸன் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

இந்நிலையில், 128 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி துடுப்பெடுத்தாட தயாராகிவருகிறது.