மகளிருக்கான ஆஷஸ் போட்டியில் ‘முடிவு மறு ஆய்வு’ திட்டத்தை அறிமுகப்படுத்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை தீர்மானம்

jpg
jpg

கோடை கால மகளிருக்கான ஆஷஸ் போட்டியின்போது ‘முடிவு மறு ஆய்வு’  திட்டத்தை அறிமுகப்படுத்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்தின்போது இரண்டு சர்ச்சைக்குரிய கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது ‘முடிவு மறு ஆய்வுத் திட்டம்’ அமுலில் இருந்திருந்தால் இந்த சர்ச்சை ஏற்பட்டிருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘முடிவு மறு ஆய்வுத் திட்டம்’ இரு தரப்பு மகளீர் போட்டிகளின்போது இதற்கு முன்னர் எப்பொழுதும் அமுல்படுத்தப்பட்டிருக்கவில்லை.

தற்போது நடைபெற்றுவரும் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் இழப்பிற்கு 377 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் இந்திய அணி ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

அவுஸ்திரேலியா 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 143 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இதேவேளை போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு 4 புள்ளிகள் கிடைக்கும்.

போட்டி சரிசமனாக நிறைவடையும் பட்சத்தில் ஒவ்வொரு அணிக்கும் தலா 2 புள்ளிகள் வழங்கப்படும்.