இந்திய அணியின் போட்டி விபரங்கள் இதோ!

download 3 3
download 3 3

இந்திய கிரிக்கெட் அணி 2020 ஆண்டில் விளையாடவுள்ள போட்டிகளின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து ஜனவரி 5ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை மூன்று இருபது ஓவர் போட்டிகளில் விளையாடவுள்ளது.

அவுஸ்ரேலிய அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து ஜனவரி 14ஆம் திகதி முதல் ஜனவரி 19ஆம் வரை மூன்று ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது.

அத்துடன், இந்திய அணி ஜனவரி 24ஆம் திகதி முதல் மார்ச் 4ஆம் திகதி வரை நியூசிலாந்திற்கு சுற்றுப் பயணம் செய்கிறது.

மார்ச் 12ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை தென் ஆபிரிக்க அணி, இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

ஜூலை மாதம் இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து இந்திய அணி தலா மூன்று ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.

செப்டம்பர் மாதம் முதல் ஒக்டோபர் வரை இங்கிலாந்து அணி இந்தியா வருகிறது.

அக்டோபர் மாதம் அவுஸ்ரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து டி20 தொடரில் விளையாடுகிறது.

டிசம்பர் மாதம் முதல் 2021 ஜனவரி வரை இந்திய அணி அவுஸ்ரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.