இங்கிலாந்தை பந்தாடியது தென்னாபிரிக்கா!

kk
kk

சென்சுரியனில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், தென்னாபிரிக்கா அணி வெற்றிபெற்றுள்ளது.

இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது

இதன்படி முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி, முதல் இன்னிங்ஸிற்காக 284 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்ஸ்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, 181 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

103 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய தென்னாபிரிக்கா அணி, 272 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 376 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, 376 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இங்கிலாந்து அணியால், 268 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் தென்னாபிரிக்கா அணி 107 ஓட்டங்களால் அபார வெற்றியை பதிவு செய்தது.

இந்த வெற்றியின் மூலம் ஆறு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 1-0 என்ற கணக்கில் தென்னாபிரிக்கா அணி முன்னிலைப் பெற்றுள்ளது.

இதேவேளை இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, எதிர்வரும் ஆண்டு ஜனவரி 3ஆம் திகதி கேப்டவுண் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது .