இலங்கை அணிக்கு இலகு வெற்றி!

srilanka worldcup jersey
srilanka worldcup jersey

உலகக் கிண்ண இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரின் 12ஆவது போட்டியில் 08 விக்கெட்டுக்களால் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 10 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 44 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

நெதர்லாந்து அணியின் கொலின் அக்கர்மனை தவிர ஏனைய வீரர்கள் துடுப்பாட்டத்தில் சோபிக்க தவறினர்.

பந்துவீச்சில் இலங்கை அணியின் வனிந்து ஹசரங்க 09 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களையும், லஹிரு குமார 07 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

அத்துடன், மகீஷ் தீக்ஷன ஒரு ஓவர் பந்து வீசி 03 ஓட்டங்களைக் கொடுத்து 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இதற்கிடையில், மகீஷ் தீக்ஷன முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாகப் போட்டியின் இடைநடுவே மைதானத்தை விட்டு நீங்கினார்.

இந்நிலையில், 45 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 7.1 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அணிசார்பில் அதிகபடியாக குசல் ஜனித் பெரேரா 33 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் நெதர்லாந்து அணியின் பிராண்டன் குளோவர் 12 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.