பங்களாதேஷை வென்றது அவுஸ்திரேலியா!

20 20
20 20

2021 உலகக்கிண்ண இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரின் பங்களாதேஷ் அணிக்கு எதிரான இன்றையப்போட்டியில் 8 விக்கெட்டுக்களால் அவுஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி 15 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 73 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

இந்நிலையில் 74 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய அவுஸ்திரேலியா அணி 6.2 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 78 ஓட்டங்களைப்பெற்று வெற்றி பெற்றுள்ளது. 

போட்டியின் ஆட்ட நாயகனாக அடம் ஸாம்பா தெரிவானார். அவர் 4 ஓவர்களில் 19 ஓட்டங்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.