தீபாவளியை விடுமுறை தினமாக்குங்கள் – அமெரிக்காவில் பிரேரணை

pic
pic

தீபாவளி தினத்தை கூட்டாட்சி விடுமுறையாக அறிவிக்குமாறு காங்கிரஸ் உறுப்பினர் கரோலின் மலோனி பிரேரணை ஒன்றை முன்வைத்துள்ளார்.

இந்திய அமெரிக்க சமூக உறுப்பினர்களை பிரதிநிதித்துவப்படுத்தும், இந்திய புலம்பெயர் அமைப்பின் நிர்வாக பணிப்பாளர் சஞ்சீவ் ஜோஷிபுரா உள்ளிட்டவர்கள் இதற்கு ஆதரவளித்து வருகின்றனர்.

குறித்த பிரேரணைக்கு ஒப்புதல் கிடைத்தால், தீபாவளியைக் கொண்டாடும் குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட கூட்டாட்சி நிறுவனங்களில் விடுமுறை அனுசரிக்கப்படும்.

மேலும் அமெரிக்காவில் விடுமுறையைக் கொண்டாடும் மில்லியன் கணக்கான இந்திய அமெரிக்கர்களின் கலாச்சார பாரம்பரியத்தை பெரும் மதிப்பாக இருக்கும் என்றும் குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன் தீபாவளியை கௌரவிக்கும் வகையில் அமெரிக்க தபால் சேவை ஒரு நினைவு முத்திரையை வெளியிட வேண்டும் என்று கடந்த காலங்களில் காங்கிரஸ் உறுப்பினர் மலோனி வெற்றிகரமாக நாடு முழுவதும் உள்ள வழக்கறிஞர்களுடன் இணைந்து பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.