கடந்த 10 ஆண்டுகளில் டி-20 வேகப்பந்து வீச்சின் ‘அரசனாக’ முடி சூடப்பட்டார் லசித் மலிங்கா

201708311053034425 India vs Sri Lanka Ready to play until 2023 says Lasith SECVPF
201708311053034425 India vs Sri Lanka Ready to play until 2023 says Lasith SECVPF

கிரிக்கெட்டின் ‘பைபிள்’ என போற்றப்படும் ‘விஸ்டன்’ இதழ். கடந்த பத்தாண்டின் சிறந்த அணிகளை தேர்வு செய்து வெளியிட்டு வருகிறது.

விஸ்டனின் கடந்த பத்தாண்டின் சிறந்த டி-20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், இந்திய வீரர்கள் கோஹ்லி, பும்ரா இடம்பிடித்துள்ளனர். ஆனால், டோனி இடம்பெறவில்லை.

அதேசமயம் இலங்கை அணியிலிருந்து அனுபவமிக்க நட்சத்திர வீரர் லசித் மலிங்கா இடம் பிடித்துள்ளார்.

லசித் மலிங்கா குறித்து விஸ்டன் இதழ் குறிப்பிட்டுள்ளதாவது, டி-20 வேகப்பந்து வீச்சின் ‘கிங்’ (அரசன்) மலிங்கா என புகழ்ந்துள்ளது.

மேலும், இந்த அணியில் வில்லே மற்றும் பும்ரா அடங்கிய வேகப்பந்து வீச்சு பிரிவுக்கு மலிங்கா தலைமையாக செயல்படுவார்.

மலிங்காவின் புல் லென்த் பந்த ஸ்டம்புகளை தகர்க்கிறது. இதன் மூலம் அவர் வழக்கமான விக்கெட்டுகளை கைப்பற்றும் வீரராக இருக்கிறார்.

இன்னிங்ஸின் ஆரம்பம் மற்றும் இறுதியில் பந்து வீசினாலும், மலிங்கா 7.15 என சிறந்த பந்து வீச்சு விகிதம் வைத்துள்ளார். இதன் மூலம் வேகப்பந்து வீச்சாளர்களில் சிறந்த விகிதம் வைத்துள்ள 7வது வீரராக அவர் திகழ்கிறார் என விஸ்டன் இதழ் புகழ்ந்துள்ளது.