8ஆவது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார் தனஞ்சய டி சில்வா!

தனஞ்சய டி சில்வா
தனஞ்சய டி சில்வா

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தில் இலங்கை அணியின் தனஞ்சய டி  சில்வா தனது 8ஆவது சதத்தைப் பூர்த்தி செய்துள்ளார்.

இவர் 187 பந்துகளுக்கு முகங்கொடுத்து, எட்டு 4 பவுண்டரிகள் ஒரு சிக்ஸர் அடங்கலாக 100 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

இரு அணிகளுக்குமிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலாவது இன்னிங்ஸுக்காக துடுப்பாடிய இலங்கை அணி 204 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இந்நிலையில், தமது முதலாவது இன்னிங்ஸுக்காக துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 253 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.