இந்தியா – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாள் ஆட்டம் இன்று!

india and new zealand twenty 20 54f6f23e 42a0 11ea bfa0 35d85fc987f6
india and new zealand twenty 20 54f6f23e 42a0 11ea bfa0 35d85fc987f6

இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று(05) இடம்பெற்றது.

போட்டியில் 540 என்ற வெற்றியிலக்கை நோக்கி, தமது இரண்டாவது இனிங்ஸிற்காக துடுப்பாடும் நியூஸிலாந்து இன்றைய மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 140 ஓட்டங்களை பெற்றிருந்தது.

முன்னதாக துடுப்பாடிய இந்திய அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 276 ஓட்டங்களை பெற்றிருந்தபோது ஆட்டத்தை இடைநிறுத்தியது.

இந்திய அணி அதன் முதல் இனிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 325 ஓட்டங்களையும், நியூஸிலாந்து அணி அதன் முதல் இனிங்ஸில் 62 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்தமை குறிப்பிடத்தக்கது.