பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணிக்குழாமின் மூன்று வீரர்களுக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.
மூன்று இருபதுக்கு 20 மற்றும் மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக, கடந்த வியாழக்கிழமை, மேற்கிந்தியத் தீவுகள் அணிக்குழாம் பாகிஸ்தானை சென்றடைந்தது.
இந்நிலையில், ஷெல்டன் கொட்ரெல், ரொஸ்டன் சேஸ் மற்றும் கைல் மேயர்ஸ் ஆகிய மூன்று வீரர்களுக்கும், பயிற்றுவிப்பாளர் அல்லாத அணி முகாமைத்துவ உறுப்பினர் ஒருவருக்கும், கொவிட் தொற்று உறுதியானதாக மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான இருபதுக்கு 20 தொடர் நாளைய தினம் ஆரம்பமாகவுள்ளது. குறித்த தொடரில் அந்த மூன்று வீரர்களும் பங்கேற்க மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.