ஜோபைடன் ரஷ்யாவுக்கு எச்சரிக்கை!

Joe biden USA 23062020
Joe biden USA 23062020

ரஷ்யா, யுக்ரேனை ஆக்கிரமிக்கும் இராணுவ நடவடிக்கையில் ஈடுபடும் பட்சத்தில் பாரிய விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் எச்சரித்துள்ளார்.

இப்படியான நிலை ஏற்படும் பட்சத்தில், அமெரிக்க துருப்பினை தரைமார்க்கமாக யுக்ரேனுக்கு அனுப்பி வைக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று ஊடகவியலாளர் மத்தியில் கருத்து வெளியிட்டபோதே, அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன், இரண்டு மணிநேர உரையாடலின்போது, தெளிவாக இதனை தாம் வலியுறுத்தியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அதனையும் மீறி ரஷ்யா யுக்ரேனை ஆக்கிரமித்தால், அமெரிக்கா மட்டுமல்லாமல் சர்வதேசமும் தமது எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கும்.

அத்துடன், யுக்ரேனின் கிழக்கு பிராந்தியத்திற்கு ஐக்கிய நாடுகள் மற்றும் நேட்டோ படைப்பிரிவினரையும் நகர்த்த வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அமெரிக்காவில் பாரிய அழிவினை ஏற்படுத்தியுள்ள சூறாவளி ஐந்து மாநிலங்களை ஒரே இரவில் தாக்கியுள்ளது.

இந்த அனர்த்தத்தில் 80 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மரணித்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என தெரிவித்துள்ள மீட்புப் பணியாளர்கள், காலநிலை சீர்கேடு தொடர்வதனால் சேத விபரங்களை மதிப்பிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

வரலாற்றில், அமெரிக்கா எதிர்நோக்கிய பாரிய சூறாவளிகளில் இதுவும் ஒன்று என ஜனாதிபதி ஜோபைடன் தெரிவித்துள்ளார்.