ரோஸ் டெய்லர் புதிய சாதனை!

Taylor
Taylor

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்களைக் குவித்த நியூசிலாந்து வீரர் எனும் சாதனையை அவ்வணியின் சிரேஷ்ட வீரர் ரோஸ் டெய்லர் படைத்துள்ளார்.

அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் 2ஆவது இன்னிங்ஸில் 22 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட வேளையில் இச்சாதனையினை படைத்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்களைக் குவித்த நியூஸிலாந்து வீரர் என்ற ஸ்டீபன் பிளெமிங்கின் வசமிருந்தது.

ரொஸ் டெய்லர் இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் 174 இன்னிங்ஸில் 7,174 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இவருடைய துடுப்பாட்ட சராசரி 46.28 ஆகும். இதில் 19 சதங்கள் மற்றும் 33 அரைச்சதங்கள் அடங்கும்.

இதேவேளை, 35 வயதான ரொஸ் டெய்லர், தனது 100ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கெதிராக எதிர்வரும் பெப்ரவரி மாதம் விளையாடவுள்ளார்.