19 வயதிற்குட்பட்டோர் உலகக் கிண்ணம் – இலங்கை குழாம் அறிவிப்பு

u19
u19

தென்னாபிரிக்காவில் இம்மாதம் 17ம் திகதி ஆரம்பமாகவுள்ள 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான 15 பேர்கொண்ட குழாத்தினை இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இலங்கை இளையோர் அணியின் தலைவராக நிபுன் தனன்ஜய உலகக் கிண்ணத் தொடருக்கான அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை இளையோர் அணி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண தொடரின் A குழுவில் இடம்பெற்றுள்ளதுடன், குழுநிலை போட்டியில் நடப்பு சம்பியன் இந்தியா, நியூசிலாந்து மற்றும் ஜப்பான் ஆகிய அணிகளை எதிர்கொள்ளவுள்ளது.

இலங்கை இளையோர் குழாம்

நிபுன் தனன்ஜய (அணித் தலைவர்), கமில் மிஷார, நவோத் பரணவிதான, அஹான் விக்ரமசிங்க, ரவிந்து டி சில்வா, சொனால் தினூஷ, மொஹமட் சமாஸ், தவீஷ அபிஷேக், சமிந்து விஜேசிங்க, அஷைன் டேனியல், டிலும் சுதீர, டில்ஷான் மதுசங்க, அம்ஷி டி சில்வா, கவிந்து நதீஷன், மதீஷ பத்திரண

இளையோர் உலகக் கிண்ணத்தின் குழுநிலை விபரம்

  • குழு A – இந்தியா, இலங்கை, நியூசிலாந்து, ஜப்பான்
  • குழு B – அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், நைஜீரியா
  • குழு C – பாகிஸ்தான், பங்களாதேஷ், ஜிம்பாப்வே, ஸ்கொட்லாந்து
  • குழு D – ஆப்கானிஸ்தான், தென்னாபிரிக்கா, ஐக்கிய அரபு இராச்சியம், கனடா