தொடரை சமப்படுத்தும் முனைப்பில் இலங்கை அணி

ind vs sl 3
ind vs sl 3

3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய 1-0 என முன்னிலை பெற்றுள்ள நிலையில் மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமப்படுத்தும் முனைப்பில் இலங்கை அணி உள்ளது.

இந்தியா சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டி கொண்ட T20 தொடரில் விளையாடுகிறது.

முதலாவது ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் இரத்து செய்யப்பட்டது.

இரண்டாவது ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி புனேயில் இன்று நடைபெறவுள்ளது.

இப்போட்டி இன்றிரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.