மனம் திறந்தார் மலிங்க!

EAdUkVUVUAA2MAK
EAdUkVUVUAA2MAK

இந்திய அணிக்கெதிரான இருபதுக்கு இருபது தொடரை இழந்தமைக்கு தானும் ஒரு காரணம் என இலங்கை அணியின் தலைவர் லசித் மாலிங்க தெரிவித்துள்ளார்.

இந்திய அணியுடன் 3 இருபதுக் இருபது போட்டிகளை கொண்ட தொடரில் 2-0 என இலங்கை அணி தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “நாங்கள் 2:0 என தொடரை முழுமையாக இழந்துள்ளோம். நான் சிறப்பாக செயற்பட்டிருக்க வேண்டும். 

ஆனால் இந்தத் தொடரில் ஒரு விக்கெட்டைக் கூட நான் கைப்பற்றவில்லை.

ரி-20 போட்டிகளில் இலங்கை அணியில் உள்ள வீரர்களில் அதிக அனுபவம் கொண்டவன் நான். வழக்கமாக விக்கெட்டுகள் கைப்பற்றக்கூடிய பந்து வீச்சாளர் என்பதால் விக்கெட் வீழ்த்த வேண்டும் என்ற நெருக்கடி எனக்கு இருந்தது.

ஆனால் என்னைப் பொறுத்தவரையில் நாங்கள் வெற்றிபெற வேண்டுமானால் முதல் 6 ஓவர்களுக்குள் ஒன்றிரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியாக வேண்டும். அதை நாங்கள் இந்தத் தொடரில் செய்யவில்லை. இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் சிறந்த இணைப்பாட்டத்தினை அமைத்தனர்.

ரி-20 போட்டிகளில் இணைப்பாட்டம் மிகவும் முக்கியமாகும். எங்கள் அணி வீரர்களால் துடுப்பெடுத்தாட முடியும். அதிரடியாக விளையாட முடியும். ஆனால் அவர்கள் ஆட்டத்தைக் கட்டமைப்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும். இதில்தான் அவர்கள் தேக்கம் அடைகின்றனர்.

கடந்த காலங்களில் குமார் சங்கக்கார, ஜெயவர்தன, டில்ஷான் ஆகியோருக்கு இன்னிங்ஸை எப்படிக் கட்டமைப்பது என்பது தெரிந்திருந்தது. தற்போது அணியில் உள்ள இளம் வீரர்கள் திறன் உள்ளவர்கள் தான். தங்களது ஷொட்களை விளையாட அவர்கள் விரும்புகின்றனர்.

ஆனால் சில நேரங்களில் அமைதியாக இருக்க வேண்டும். நிலைமையைக் கையாள வேண்டும். இந்த பகுதியில் அவர்கள் சுணக்கம் அடைகின்றனர். அனுபவம் வாய்ந்த வீரர்கள் அணியில் இருந்தால் நிலைமையை அவர்கள் கையாள்வார்கள். அணித்தலைவரின் பணி எளிதாக இருக்கும்.

ஆனால் அந்த வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. தற்போதுள்ள வீரர்கள் அனுபவம் இல்லாதவர்கள். அவர்களை வழி நடத்துகிறேன். பொறுத்திருந்து பார்ப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.