பாகிஸ்தான் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படும் – உள்துறை அமைச்சர் தெரிவிப்பு

201912180736479036 no repealing Amended Citizenship Act Amit Shah SECVPF
201912180736479036 no repealing Amended Citizenship Act Amit Shah SECVPF

பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக வந்தவர்களுக்கு குடியுரிமை அளிக்காமல் மத்திய அரசு ஓயாதென மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம்- ஜபல்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அமித்ஷா மேலும் கூறியுள்ளதாவது, “காங்கிரஸ் தலைவர்களுக்கு நான் சத்தமாக சொல்லிக்கொள்கிறேன். நன்றாக கேட்டுக்கொள்ளுங்கள். குடியுரிமை திருத்த சட்டத்தை உங்களால் முடிந்த அளவுக்கு எதிர்த்துக் கொள்ளுங்கள்.

ஆனால் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்டு அகதிகளாக வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்காமல் மத்திய அரசு ஓயாது. யாரும் எங்களை தடுக்க முடியாது.

மேலும் ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருக்கு சவால் விடுகிறேன். யாருடைய குடியுரிமையாவது பறிக்கப்படும் என்று குடியுரிமை சட்டத்தில் எந்த ஒரு சட்டப்பிரிவிலாவது இருக்கிறதா என்று காட்டுங்கள் பார்க்கலாம்.

இது குடியுரிமை அளிக்கும் மசோதா. குடியுரிமையை பறிக்கும் மசோதா அல்ல.

கடந்த ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலின்போது, பாகிஸ்தானில் இருந்து வந்த இந்து, சீக்கிய அகதிகளுக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்படும் என்று காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது.

ஆனால் அதனை செயற்படுத்தும் பா.ஜ.க.வை தற்போது எதிர்க்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.