சாதனையை முறியடிக்க காத்திருக்கும் கோஹ்லி!

20016
20016

இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் விளையாடவுள்ள நிலையில் அப்போட்டியில் டோனியின் முக்கிய சாதனையை கோஹ்லி தகர்க்க காத்திருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்கிறது. இதில் ஆக்லாந்தில் நடந்த முதல் இரண்டு போட்டியிலும் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றது. இரு அணிகள் மோதும் மூன்றாவது டி-20 போட்டி இன்று ஹாமில்டனில் நடக்கிறது.

இப்போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி இன்னும் 25 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் டி-20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் விளாசிய கேப்டன்கள் பட்டியலில் முன்னாள் இந்திய கேப்டன் டோனியை பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடம் பிடிப்பார்.

கேப்டனாக டி-20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் தென் ஆப்ரிக்காவின் ஃபாப் டுபிளஸிஸ் (1273 ரன்கள்) முதலிடத்திலும், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் (1148 ரன்கள்) இரண்டாமிடத்திலும் உள்ளனர்.