பரபரப்பான சுப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றி

virat 1
virat 1

இந்திய நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 3வது ரி20 போட்டிியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது,

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 நிறைவில் 5 விக்கட் இழப்பிற்கு 179 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்திய அணியின் துடுப்பெடுத்தாட்டத்தில் ரோகித் ஷர்மா 65 ஓட்டங்களையும், விராட் கோலி 38 ஓட்டங்களையும், கே.எல்.ராகுல் 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் பென்னட் 3 விக்கட்டுக்களையும், மிட்சல் சான்ட்னர், கொலின் டி கிரான்கோம் தலா ஒரு விக்கட்டினை வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 20ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 179 ஓட்டங்களை பெற்றுக்கொண்டு ஆட்டத்தை சமநிலையில் நிறைவு செய்தது.

நியூசிலாந்து அணியின் துடுப்பெடுத்தாட்டத்தில் வில்லியம்சன் 95 ஓட்டங்களையும், குப்டில் 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இந்திய அணியின் பந்துவீச்சில் தாக்கூர் 2 விக்கட்டுக்களையும், ஷமி, சாகல், ஜடேஜா தலா ஒரு விக்கட்டினை வீழ்த்தினர்.

சுப்பர் ஓவரில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 17 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஒட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.

இந்த வெற்றியுடன் இந்திய அணி 3-0 என தொடரை கைப்பற்றியது.

ஆட்டநாயகனாக ரோகித் ஷர்மா தெரிவு செய்யப்பட்டார்.