ஆறுதல் வெற்றியை நோக்கி நியூசிலாந்து அணி

nz vs ind
nz vs ind

நியூசிலாந்து அணிக்கு எதிராக 4வது ரி20 போட்டி இன்று (31) வெலிங்டன் ஸ்கை விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

முதல் 3 போட்டிகளையும் வென்று தொடரை கைப்பற்றி விட்டதால் இந்திய அணியில் பரிசோதனை முயற்சியாக சில மாற்றங்கள் இருக்க வாய்ப்புகள் உள்ளன.

விக்கெட் காப்பில் ராகுலுக்கு பதில் சஞ்சு சாம்சனுக்கும், பந்துவீச்சில் சைனி, குல்தீப் யாதவ், வொஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கும் வாய்ப்பு அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடரை இழந்தமையினால் நியூசிலாந்து அணி எஞ்சிய 2 போட்டிகளில் வென்று ஆறுதல் வெற்றியை பெறும் நோக்கில் களமிறங்கவுள்ளது.