பாகிஸ்தான் டெஸ்ட் அணி அறிவிப்பு!

0107f 15759494691625 800
0107f 15759494691625 800

பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும், மாற்றம் கலந்த பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அசார் அலி தலைமையிலான 16பேர் கொண்ட அணியில், சகலதுறை வீரரான பிலால் ஆஸிப், ஓராண்டுக்கு பிறகு மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இதுதவிர, பந்துவீச்சு சகலதுறை வீரர் பஷீம் அஸ்ரப்பும் மீண்டும் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

கடந்த டெஸ்ட் அணியில் இடம்பெற்றிருந்த காஷிப் பட்டி மற்றும் உஸ்மான் ஷின்வாரி ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

தற்போது அணியின் முழுமையான விபரத்தை பார்க்கலாம்,

அசார் அலி தலைமையிலான அணியில், அபீட் அலி, அசாட் சபீக், பாபர் அசாம், பீலால் அசீப், பஷீம் அஷ்ரப், பவாட் அலாம், ஹரிஸ் சொஹைல், இமாம் உல் ஹக், இம்ரான் கான், மொஹமட் அப்பாஸ், மொஹமட் ரிஸ்வான், நயீம் ஷா, ஷாயீன் அப்ரிடி, ஷான் மசூத், யாசிர் ஷா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.