ஜப்பானில் இதயத்தை கொண்டு சென்ற வானுார்தி விபத்து

japan 300x188
japan 300x188

ஜப்பானில் இதயத்தை கொண்டு சென்ற வானுார்தி விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.

இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக இதயத்தை கொண்டுச் சென்ற வானுார்தி இன்று(01) காலை விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஐசுவகமட்சு நகரில் உள்ள புகுஷிமா வைத்தியசாலையிலிருந்து மாகாண விமான நிலையத்திற்கு செல்லும் வழியிலேயே, கோரியமா நகரில் ஒரு நெல் வயலில் விழுந்து குறித்த வானுார்தி விபத்துக்குள்ளானது.

இதில், மூன்று பொலிஸ் அதிகாரிகள், இரண்டு தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் இரண்டு வைத்திய ஊழியர்கள் இருந்தனர்.

வைத்திய ஊழியர்களில் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளதாகவும், ஆனால் அது உயிராபத்தான காயங்கள் இல்லை எனவும் வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து, இதுவரை எவ்வித தகவலும் வெளியிடப்படாத நிலையில், இவ்விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.