பும்ரா உலக சாதனை!

image
image

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

ஐந்து டி20 போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து அணியுடன் விளையாடுகிறது.

இந்திய அணி அனைத்து போட்டிகளிளும் வெற்றி பெற்று நியூசிலாந்து அணியை வயிட் வாஷ் செய்தது. 

இருதரப்பு சர்வதேச டி20 போட்டிகளில், 5 போட்டிகளில் வெற்று பெற்று எதிரணி வயிட்வாஷ் செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும். இந்த வரலாற்று சிறப்பு மிக்க சாதனையை இந்திய அணி தன்வசமாக்கியது.

 
இந்நிலையில், நேற்று நடந்த 5வது டி20 போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா புதிய உலக சாதனை படைத்தார். 

நேற்றைய ஆட்டத்தில் ஜஸ்பிரித் பும்ரா சிறப்பாக பந்து வீசினார். 4 ஓவர்கள் வீசி வெறும் 12 ரன்களே விட்டுக்கொடுத்த பும்ரா மூன்று முக்கிய விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இதில் ஒரு மெய்டன் ஓவரும் அடங்கும்.

இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் பும்ரா 7 மெய்டன் ஓவர்களை வீசி சாதனை படைத்தார். இதற்கு முன்னதாக சர்வதேச டி20 போட்டிகளில், இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவன் குலசேகரா (58 போட்டிகள்)  6 ஓவர்கள் மெய்டனாக வீசியதே உலக சாதனையாக இருந்தது.