இரண்டாவது போட்டி இன்று

de 1580889923
de 1580889923

இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று(07) இடம்பெறவுள்ளது.

இரவு பகல் ஆட்டமாக இடம்பெறவுள்ள இந்த போட்டி தென்னாப்பிரிக்காவின் டேர்பன் மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 4.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது.

இங்கிலாந்து கிரிக்கட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்றது.

இரு அணிகளுக்கும் இடையில் மூன்று சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் இடம்பெறுகின்றன.

இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.