9வது கிரிக்கற் சமர் மட்டு.இந்துக்கல்லூரி வசம்

hindu college
hindu college

மட்டக்களப்பு இந்துக்கல்லூரி ஒரு ஒட்டத்தால் வெற்றிபெற்றது.

மட்டு.இந்துக்கல்லூரி மற்றும் பெரியகல்லாறு மத்தியகல்லூரி அணிகளுக்கிடையில் 9வது கிரிக்கற் சமர் (Big Match) பெரியகல்லாறு மத்தியகல்லூரி அதிபர் எஸ்.பேரின்பராஜா தலைமையில் 5ந்திகதி சனிக்கிழமை பெரியகல்லாறு பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மட்டக்களப்பு இந்துக்கல்லூரி துடுப்பாட்டத்தை மேற்கொண்டு சகல விக்கட்டுக்களையும் இழந்து, 168 ஓட்டக்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பெரியகல்லாறு மத்திய கல்லூரி 167 ஓட்டங்களை பெற்று சகல விக்கட்டுக்களையும் இழந்து தோல்வியைத் தழுவியது.

பிரதம அதிதியாக கலந்து கொண்ட மலையக புதிய கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பி.சுரேஷ் கிண்ணத்தை வழங்கி வைத்தார் .