பாகிஸ்தானை வெள்ளயைடிப்பு செய்து இலங்கை அணி

hasaranka
hasaranka

பாகிஸ்தானுக்கெதிரான மூன்றாவது T20 போட்டியில் இலங்கை அணி 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3-0 என தொடரை கைப்பற்றி வெள்ளயைடிப்பு செய்துள்ளது.

தொடரின் முதலிரு போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியிருந்த நிலையில் தொடரின் மூன்றாவது போட்டி இன்று லாகூரில் நடைபெற்றது

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 147 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பாக ஒஷத பெர்னான்டோ ஆட்டமிழக்காது 78 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் மொஹமட் ஆமிர் 27 ஒட்டங்களுக்கு 03 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.

வெற்றி இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஒவர்கள் நிறைவில் 06 விக்கட்டுக்களை இழந்து 134 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

ஹரிஸ் சொஹைல் 52 ஓட்டங்களையும், பாபர் அசாம் 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். இலங்கை அணி சார்பாக வனிந்து ஹஷரங்க 21 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களையும், லஹிரு குமார 24 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர்.

வனிந்து ஹசரங்க ஆட்டநாயகனாகவும், தொடராட்ட நாயகனாகவும் செய்யப்பட்டார்.

இலங்கை அணி பல முன்னணி வீரர்களின்றிய நிலையில் இத்தொடரை எதிர்கொண்டு வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இத்தொடரில் பிரகாசித்த பெரும்பாலான வீரர்களுக்கு எதிர்வரும் அவுஸ்ரேலிய தொடரில் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுகின்றது.