T20 தரவரிசையில் இலங்கை அணி முன்னேற்றம்

ICC
ICC

சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) T20 போட்டிகளுக்கான தர வரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தான் அணிக்கெதிரான T20 போட்டித் தொடரை 3ற்கு பூச்சியம் என வெள்ளையடிப்பு செய்ததன் அடிப்படையில் 8ம் இடத்திலிருந்த இலங்கை அணி 7ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இதேவேளை, பாகிஸ்தான் அணியின் தர வரிசையில் முதலிடத்தினை தக்கவைத்துள்ள அதேவேளை வீழ்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிதாக வெளியிடப்பட்டுள்ள தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில் அணிகள் பின்வரும் இடங்களை தக்கவைத்துக்கொண்டுள்ளன.

  1. பாகிஸ்தான்
  2. இங்கிலாந்து
  3. தென்னாபிரிக்கா
  4. இந்தியா
  5. அவுஸ்ரேலியா
  6. நியூசிலாந்து
  7. இலங்கை
  8. ஆப்கானிஸ்தான்
  9. மேற்கிந்தியதீவு
  10. பங்களாதேஸ்