BCCIஇன் தலைவராக கங்குலி போட்டியின்றி தேர்வு

sourav ganguly
sourav ganguly

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (BCCI) புதிய தலைவராக போட்டியின்றி சௌரவ் கங்குலி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

BCCIயின் புதிய தலைவராக, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் கங்குலி தேர்வு செய்யப்படுவார் எனதகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக இந்த முடிவை எடுத்ததாக தெரிய வந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து கங்குலி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

கங்குலி, பி.சி.சி.ஐ-யின் தலைவரானதும் தான் செய்ய வேண்டிய பணி குறித்து “பி.சி.சி.ஐ-யின் நிலை தற்போது மோசமாக இருக்கிறது. இதை சரி செய்வதற்கு எனக்கு இது நல்ல வாய்ப்பாக இருக்கும் என நினைக்கிறேன். போட்டியே இல்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் இந்த பதவி மிகப் பெரிய பொறுப்பு.

காரணம், உலக கிரிக்கெட்டில் இந்திய கிரிக்கெட் வாரியம் தான் பெரியது. இந்தியா தான் Powerhouse. அதனால் இந்தப் பயணம் நிச்சயம் கடினமாகத்தான் இருக்கும். அவர் (முன்னாள் தலைவர் ஜக்மோகன் டால்மியா) பயணித்த பாதையில் நானும் பயணிப்பேன் என ஒரு காலமும் நினைத்துக் கூட பார்த்தது கிடையாது. அவர் எனக்கு அப்பா போன்றவர்” என இந்தியா டுடே ஊடகத்திற்கு தெரிவித்திருந்தார்.