சுப்பர் ஓவர் விதிமுறையில் மாற்றம்!

Super Over
Super Over

இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி சுப்பர் ஓவரில் சமனிலையில் முடிந்தும், பௌண்டரிகள் அடிப்படையில், இங்கிலாந்து அணிக்கு உலகக் கிண்ணம் வழங்கப்பட்டிருந்தது.

குறித்த இந்த சம்பவத்தின் பின்னர், இந்த பௌண்டரி விதிமுறையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என கிரிக்கெட் ஆர்வாளர்கள் கருத்து வெளியிட்டு வந்தனர்.

இவ்வாறான நிலையில், ICCஇன் நிர்வாகக் குழு சந்திப்பு டுபாயில் நடைபெற்ற நிலையில், சுப்பர் ஓவரின் (Super Over) பௌண்டரி விதிமுறையில், மாற்றத்தை கொண்டுவர முடிவு செய்துள்ளது. அதன்படி, இனி ICCஇனால் நடத்தப்படும் தொடர்களில் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில், சுப்பர் ஓவர் சமனிலையில் முடிவடைந்தால், போட்டியின் முடிவில் பௌண்டரிகள் கணக்கிடப்படாது எனவும் சுப்பர் ஓவரின் மூலம் சமனிலையாகுமாயின், ஒரு அணி அதிக ஓட்டங்களை பெறும் வரையில் சுப்பர் ஓவர்கள் தொடர்ச்சியாக வழங்கப்படும் என ICC அறிவித்துள்ளது.

ஆனால், இறுதிப் போட்டி மற்றும் அரையிறுதிப் போட்டிகளுக்கு போன்று லீக் போட்டிகளில் சுப்பர் ஓவர் சமனிலையில் முடிந்தால் மீண்டும் சுப்பர் ஓவர்கள் வழங்கப்பட மாட்டாது. குறித்த சுப்பர் ஓவர்கள் சமனிலையானால், ஏற்கனவே உள்ள விதிமுறையின் படி, அதிக பௌண்டரிகளை விளாசிய அணிக்கு வெற்றி வாய்ப்பு வழங்கப்படும்.

அதேநேரம், ஐசிசியினால் நடத்தப்படும் அனைத்து தொடர்களில் வெற்றியாளரை கட்டயாம் தெரிவுசெய்ய வேண்டிய நொக்-அவுட் போட்டிகளில், ஒரு அணி அதிக ஓட்டங்களை பெறும் வரையில் சுப்பர் ஓவர்கள் வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.