முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு அழைப்பு

download 2 5
download 2 5

இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர்களான அவிஸ்க குணவர்த்தன, நுவன் சொய்சா மற்றும் தில்ஹார லொக்குஹெட்டிகே ஆகியோர் விளையாட்டுத்துறை அமைச்சுக்கு நாளை அழைக்கப்பட்டுள்ளனர்.

சர்வதேச கிரிக்கட் சபையால் அவர்கள் சட்டவிரோதமாக இடைநிறுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு டுபாயில் இடம்பெற்ற 10 ஓவர் கிரிக்கட் தொடரில் குறித்த மூன்று வீரர்களும் ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

இதற்கமைய அவர்கள் வகித்த பதவிகளில் இருந்து விலக்குவதற்கு சர்வதேச கிரிக்கட் சபை, இலங்கை கிரிக்கட் நிறுவனத்திற்கு அறிவித்திருந்தது.

இந்த கோரிக்கைக்கு அமைய இலங்கை ஏ அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக செயற்பட்ட அவிஸ்க குணவர்த்தன மற்றும் பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக கடமையாமையாற்றிய நுவன் சொய்சாவும் அந்த பதவிகளில் இருந்து விலக்கப்பட்டனர்.

இது தொடர்பில் பின்னர் அவர்கள் சார்பில் இலங்கை கிரிக்கட் நிறுவனத்தில் முறைப்பாடு முன்வைக்கப்பட்ட நிலையில் குறித்த விசாரணை இடம்பெறவுள்ளது.