சர்வதேச டென்னிஸ் 5 மாதங்களுக்கு பிறகு இன்று தொடக்கம்

tennis 15 15 1584516121
tennis 15 15 1584516121

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் டென்னிஸ் போட்டி தடைப்பட்டிருந்து.

இந்நிலையில் இத்தாலியில் 31-வது பாலெர்மோ லேடீஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி இன்று முதல் 9-ந் திகதி வரை நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சர்வதேச டென்னிஸ் தொடர் கிட்டத்தட்ட 5 மாதங்களுக்கு பிறகு நடக்கப்போகும் முதல் போட்டி ஆகும்.

குறித்த போட்டியில் பெட்ரா மார்டிச் (குரோஷியா), மரியா சக்காரி (கிரீஸ்), எலிஸ் மெர்டென்ஸ் (பெல்ஜியம்), கோன்டாவெய்ட் (எஸ்தோனியா), வோன்ட்ரோசோவா (செக்குடியரசு) மிலாடெனோவிச் (பிரான்ஸ்) உள்ளிட்ட வீராங்கனைகள் களம் இறங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.