இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை பலம் பொறுந்தியது -கங்குலி

download 1 5
download 1 5

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை சிறந்த பலம் பொறுந்திய ஒரு அமைப்பு எனவும்,இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்கான பிரதான அனுசரனையான சீன நிறுவனம் விலக்கப்பட்டுள்ளமை சிறு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் சவ்ரவ் கங்குலி சுட்டிக்காட்டியுள்ளார்.

சீனா மற்றும் இந்திய எல்லை பிரிச்சினையை அடுத்து இந்திய பிரீமியர் லீக் அதன் பிரதான அனுசரணையாளரான வீவோ நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை கடந்த வாரம் ரத்து செய்திருந்தது.

இந்த நிலையில் இது தொடர்பில் நேரலை ஊடாக கருத்துரைத்த போதே இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் சவ்ரவ் கங்குலி இதனை தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் குறித்த நிறுவனம் விலக்கப்பட்டுள்ளமை போட்டிகளில் பாரிய தாக்கத்தை செலுத்தாது எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை சிறந்த பலம் பொறுந்திய ஒரு அமைப்பு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் அடுத்து மாதம் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.